Sunday, November 9, 2008

அன்றாடவாழ்வை சமாளிப்பது எப்படி.

http://www.esnips.com/web/ENDRUMINIYAVAI


அன்றாடவாழ்வை சமாளிப்பது எப்படி.
------------------------------


நம் அன்றாட வாழ்க்கையில் நாம் படும் இன்ப துன்பங்களை சமாளிப்பது எப்படி என்று பார்த்தா முடியாதகாரியமாக உள்ளது ஆனால் அதை சமாளித்து நடக்க வேண்டிமனோபலம் அமைத்துக்கொள்ள வேண்டும் தன்னம்பிக்கை எதுக்கும் கலங்கிடாத மனம் வேண்டும் முடியாதுதான் வரவைக்கனும் வேறு வழி என்ன? இதுவே சிறந்தது.
வாழ்க்கைப்பயணத்தை மேற்கோள்ளும் போது பல பாதைகள் விரிந்து செல்லாம் அதில் நல்லதை எடுத்துகொண்டதுகெட்டதை விட்டுப்போகணும் அதற்கு முதல் தெரிவுசெய்யும் பாதை எங்கே போகின்றது என்பத நாம் முதல் சற்று நின்று தீர்மானிக்கவேண்டும். அதிகமானவர்கள். சரியான பாதையை ஏடுக்க தவறி விட்டு பின் அல்லல் படுகின்றனர் நமது அன்றாட வாழ்வின்
நம்மை சுற்றிக்கொண்டு இருப்பது என்ன பணம் என்ற பற்றாக்குறை இதனால் தான் சில சிக்கல்கள் வலம் வருகின்றது. இதை எப்படி சமாளிப்பது என்பதை முதல் அறியனும் வருமானம் எவ்வளவு வருகின்றது. எந்த பிரச்சனைகளை நாம் முதல் தீர்க்கவேண்டும் நமது வருமாணத்தை வைத்து எப்ப அன்றாட வாழ்வை கொண்டு செல்ல வேண்டும் என்பதை நாம் திடமான திட்டத்தை கொண்டு வரனும் அதாவது பாதை காட்டும் கம்பம் போல் நாம் பயணம் செய்யும் போது பாதை காட்டும் கம்பத்தை பார்த்துதானே சரியான பாதைக்கு போகின்றோம் அதே போல் நாம் எந்த உரு செயலும் திட்டமிட்டு செய்தால் அதில் இருந்து கொஞ்சமாவது வாழ்கை இனிப்பாக இருக்கும். சில சமயம் சில வாய்ப்புகள் வரலாம் இந்த வழியில் போனா இப்படி சம்பாதிக்கலாம் என்று நம்மனதை சிதறிவிடும் நினைவுகள் கூட வட்டமிடலாம் ஆனால் சற்று நின்று எப்படி இருக்கும் இது நமக்கு சாத்தியமாகுமா..? இல்லை இந்த பாதை சரியா என்பதை நிதனமாக சிந்திக்கனும். முதல்.
அன்றாடவாழ்வின் பிரச்சனைக்கு உரியவர்கள் புரிந்துகொள்ளாதவர்கள். வாழ்கை என்பது சுலபமான காரியம் அல்ல அதை எப்படி அனுகுமுறையாக கொண்டு செல்லனும் என்பதை இருவருமே புரிந்து கொள்ளனும்

இரவருமே ஒருவரை ஒருவர் தன்னுடைய சொந்த உடலை காப்பது போல் ஒருவiரில் ஒருவர் அன்பாக நடமக்கனும்.இருவரும் நன்றாக புரி;து கொள்ளனும் முதல் மணைவி அதிகமாக புரிந்து கொள்ள வேண்டும் காரணம். திருமணம் செய்ய முன் தன் கணவருடைய வருமானத்துக்கு கட்டுப்பட்டுத்தானே.. வாழ்கையை ஆரம்பிக்கின்றாள் வாழ ஆரம்பித்ததும். உனது சம்பாத்தியம் போதாது உன்னோடு வாழ முடியாது என்று சில கருத்துக்களை வைத்தே சண்டை ஆரம்பித்துவிடும். காரணம் ஆசை தேவையில்லாத ஆசைகள் வளர்பதுதான் காரணம். அதிகமான பொருற்கள் மீது ஆசைப்படுவது.
எல்லோரும் வாங்குகின்றார்கள் ஏன் நாம் வாங்க முடியாது என்று மனதை குழப்புவது.வருமாணத்துக்கு மிஞ்சி கணவர் கடன் படுவது இது வாழ்கைக்கு சிறந்தது அல்ல மனைவியின் தொல்லையால் கடன்பட்டவர்கள் அதிகமான ஆண்கள்.வாழத்தான் உளஇளார்கள்.மனைவி என்பவள் எதையும் சமாளிக்கும் தன்மையுடையவளாக இருந்தால். ஊண்மையில் அன்றாட வாழ்வில் பல பிரச்சனைகளை சமாளத்துகொள்ள முடியும்.

கணவனோ மனைவியே ஒருவருக்கொருவர் உண்மையின் சின்னமாக ;ரக்கனும் துரோகம் செய்யாதவாறு இருன்கனும் இருவரும் மாறி மாறி ஒருவரை ஓரவர் துரோகம் செய்தால் வாழ்வு சின்னா பின்னமாக மாறிவிடும்.

முக்கியமாக வாழ்வில் முன்Nறிச்செல்ல விடாது ஒவ்வொருவருடைய சோம்பல் தனம் நாளை பார்ப்போம் நாளை பார்ப்போம் என்று சொல்லிக்கொண்டு துர்ங்குவது அதிகமான பெர்கள் இதுவும் அன்றாட வாழ்வின் ஒரு பிரச்சனைக்கு உரியதாகும். ஏதக்கு எடுத்தாலும் ஒருசாக்குப்போக்கு செல்வார்கள்.

திடமான மன நிலை இல்லாதவர்கள்தான் இப்படி சாக்குப்போக்குசொல்வது.
எந்த ஒருகாரியத்தையம் நாம் உடனே செய்து முடிக்கவேண்டும் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் நாம் வாழ்வை இழந்துகொண்டு போகின்றோம் என்பது உண்மை.
சிலபேர் காலம் சரியில்லை இன்று எனக்கு நல்ல நேரம் இல்லை என்பார்கள் இல்லை எனக்கு அடுத்தமாதம் தான் நல்லகாலம் என்று பலன்பார்ததேன் என்று முடங்கிப்போகும் மனங்களை முறித்துவிட்டு வாழ்வில் எதிர் நீச்சல் போட்டு செய்யும் காரியத்தை திருந்தச்செய்வது தான் நன்று சிலபேர் விரக்தியின் விழும்பில் நின்று கொண்டு ஏதோ வாழ்கின்றேன் ஏதோ போகின்றேன் என்று புலம்புவதை முதல் விடவேண்டும்.
வாழ்வின் நோக்கம் அறியாமல் பாதை மாறி ஓடுவதும் ஒடிவிட்டு ஜயோ இதற்குள் நுழைந்துவிட்டேன் என்று புலம்பிப் புறண்டுகொள்பவர்கள் அதிகமாக இப்போ உள்ளார்கள். தேவையற்ற பொருளை வாங்க எவ்வளவு கஸ்ரப்பட்டு கொள்ளும் போது ஏன் இதை வாங்க வேண்டுமா..? இது தேவைதானா என்பதை சிந்திக்க மறந்து விடுகின்றார்கள்.இதை தவிர்கவேண்டும். தேவையின்றி கடன் படுவதை நிறுத்தவேண்டும்.தேவைகளை மட்டுமே நம் வருமானத்துக்குள் பெற்றக்கொள்ளவேண்டம்.கஸ்ரப்பட்டு உழைக்க வேண்டும் அப்போதுதான் வாழ்வை சமாளித்துக்கொள்ள முடியும்.

நமது அன்றாடவாழ்வில் இன்று நடக்கும் நன்மை தீமைகளை ஏழுதி வைத்துவிட்டு இரவு உறங்கச்செல்லும் முன் அதை படித்து பார்த்தா..எது தேவை எது தேவை இல்லை என்பதை உணர்ந்து நடந்து கொள்ள முடியும்.

அன்புடன்.
கவிதைக்குயில்
ராகினி.

Friday, February 29, 2008

என் குரல் வடிவில் வரும் சிறுகதைகள் enrum iniyavai இங்கே


http://kuyil.mazhalaigal.com/
http://kuyil.mazhalaigal.com/podcast.php

Tuesday, February 26, 2008

விடாமுயற்ச்சி

விடாமுயற்ச்சி.
எடுத்த காரியத்தை முடிப்பதில் விடாமுயற்ச்சியுடன் இருப்பதற்க்கான முதல் படிதோல்வியை சந்தித்து உடனே காரியங்களை சரி செய்து மறுபடியும்ஆவதென்பது சுலபமல்ல என்பது மெய்யே..நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்ச்சிகளுமே முறியடிப்பதாக தோன்றும்பிரச்சனைகளை நாம் சில சமையங்களில்எதிர்படுகின்றோம்நம் குறிக்கோள் நெருங்க நெருங்க பிடிகொடாமல் விட்டு விலகுவதாக தோன்றலாம்காரியம் முடிந்து விட்டது என்று நாம் நினைக்கலாம் இல்லை எம்மால் நிலமையை சமாளிக்க முடியாது என்று நாம் ஒடிங்கி முடங்கி விடலாம்இதனால் மனச்சோர்வடைந்து மன உளைச்சளும் ஏற்ப்படலாம்ஒட்டப்பந்தையத்தில் ஓடும் மனிதன் தான் அடையும் இறிதிக்கோட்டை தான் அடையவேண்டும் என்றுமனதில் நிலைநிறுத்தி ஓடுகின்றான் இதேபோல் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளையும்மனதில் உறுதியான உரமாக பதியுங்கள் விடாமுயற்ச்சியாக எடுத்த காரியத்தை முடியுங்கள்.

விடாமுயற்ச்சி வெற்றி அடைவது சமுதாயத்தில் பெரியாலாவது மிகச்சுலபமாகத்தோன்றலாம்
1- வியாபர நுணுக்கங்கள் தெரியவேண்டும்
2- திறமைகளை வளத்திருத்தல் வேண்டும்
3- மனதில் திடமான உறுதி வேண்டும்
4- தன்னம்பிக்கை வேண்டும்
5- தொடங்கும் காரியத்தை விட்டுக்கொடுக்காமல் தொடர்து தளராத மனதுடன் போறாட வேண்டும்
வாழ்க்கையில் நம் திட்டங்களை அவ்வப்போது சீர்தூக்கிபார்க்க வேண்டும்
அப்போதுதான் உங்கள் முடிவுகள் சரி பார்க்கப்படும்

தவிர்க்க முடியாத தோல்விகளை சமாளிப்பதே..விடமுயற்ச்சியின்முக்கய அம்சம்.பல தடவை விழுந்தாலும் மீண்டும் மீண்டும் போறாடி வெற்றி கானவேண்டும் பிரச்சனைகளையும் தோல்விகளையும் சந்திக்க அநேகமானோர் தாயாராக இல்லைஇதற்கு காரணம் மனப்பக்குவம் இல்லை அதனால் மன பலத்தை வளர்த்துக் கொள்வதில்லைபிரச்சனைகளை தங்களுக்கு சரியாக தீர்க்க முடியவில்லை என்றால் கோபத்தைமற்றவர்களிடம் காட்டுவது மற்றவர்களில் மீது பழி சுமத்துவதுமனக்கசப்படைந்து முயற்ச்சியை கைவிடுவதுஇப்படியான மனப்பக்குவத்தை முதல் மனதில் இருந்து அழித்தால்தான்

தோல்விகள் வரும்போது தான் நம்மை நாம் உணர்ந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் உருவாகுகின்றதுநமக்கு ஒரு பாடமாக அமைகின்றது தோல்வி நிரந்தரமில்லை என்பதை உணர்ந்து கொள்ளும் போதுதான்மனதில் நம்பிக்கை உருவாகுகின்றதுஒவ்வொரு அனுபவமும் தான் வாழ்க்கைக்கு திருப்பு முனையாகின்றது நம்மை நாம் கேள்வி கேட்க்கும் போது வீணாகி விட்ட காலத்தை என்னிப்பார்க்க முடிகின்றதுஎந்த ஒரு விடயமென்றாலும் சீரான பாதையில் நிதானத்தடன் செய்து முடிக்க வேண்டும்எப்பவும் எதிலும் மனதை தெளிவாக வைத்திருங்கள் வெற்றி அடையவதற்க்கு நன்மையான விடையங்களில்கால்பதியங்கள் விடாமுயற்ச்சி எடுங்கள் வாழ்க்கையில் வெற்றி அடையுங்கள்

anpudan
rahini
germany


என் குரலில் குழந்தைகளுக்கான சிறுகதை களை கேட்டு மகிழ இங்கே செல்லுங்கள்
http://www.mazhalaigal.com/entertainment/audio/audio-001/mgla003_kuyil.php

Thursday, January 10, 2008

சந்தோசமான வாழ்வு அமைத்துக்கொள்ளவது எப்படி


சந்தோசமான வாழ்வு அமைத்துக்கொள்ளவது எப்படி



சந்தோசமாக நிறைந்த வாழ்க்கை அமைவதும் . அமைத்துக்கொள்வதும் கஸ் ரம் தான்.இருந்தும் நாம் நினைத்ததும் நம் மனதில் கட்டி எழுப்பிய கற்ப்பனைகளும் என் கணவர் இப்படித்தான் கிடைக்கனும்என் மணைவி இப்படித்தான் எனக்கு கிடைக்கனும் என்ற கற்ப்பனை கள் நம் வாலிப வயதில் கட்டி எழுப்பிய மாளிகைதான்.


ஆனால் நினைத்தது கிடைக்கவில்லை எதிர் மாறக கிடைத்த போது தான் அங்கேவிரிசல்கள் வளர்ந்து கொண்டேபோகின்றது உருவாகும் வீட்டுக்கு போடப்பட்ட அத்திவாரம் சரியாக அமையாததால் வாழ்க்கை என்ற வீடு இடிஇடியத்தொடங்கி விடுகின்றது.காரணம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள மறுப்பதும் ஒருவரை ஒரவர் நேசிக்க மறுப்பதும் தான் என்ற அகந்தைக்குள் வாழ்வதும்.

ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் போவதும். அலர்ச்சியம் செய்வதும் காரம் இல்லாமல் ஒருவரை திட்டிக்கொள்வதும்.கருணை அன்பு பாசம் தவிப்பும் இல்லாத போது அங்கே மனக்கோட்டைகள் யாவும் சிதைந்து போகின்றது.வாழ்க்கை என்பது சுலபமாக இருக்காது அது ஒரு சிறைச்சாலைதான் சிறைச்சாலையையும் கோயிலாக மாற்றிக்கொள்ள மனது வேண்டும்திடமாக வாழும் மனது வேண்டும் முயற்ச்சிதான் எதுக்கும் வெற்றி தருவது அன்றைய தம்பதிகள் இன்றும் சந்தோசமாக வாழ்கின்றார்களே அதுக்கு ஒரே ஒரு காரணம் அவர்களின் புரிந்துணர்வு விட்டுக்கொடுத்தல்.தன்னலம்கருதாத உண்மையான உழைப்பு இருவரும் ஒருவரை ஓருவர் பகிர்துகொள்ளும் பண்பு.

இன்றைய சமுதாயம் ஏன் இப்படி மாறியது . அதுதான் தான் என்ற அகங்காரம் கணவன் மணைவியிடம் மணைவி கணவரிடம் விட்டுக்கொடுக்கும் மண நிலை மாறி அன்பு காதல் மறக்கப்பட்டு இருவருக்குள் போட்டி போடும் நிலைதான் இன்றைய சமுதாயத்தின் சீர்கேடான வாழ்க்கையின் விரிசல் .


நமக்கு கிடைத்த நேரத்தையும் மயற்ச்சியையும் நமக்குள் நாம் அர்ப்பணித்துக்கொள்ளனும் முதல் அர்பணித்துக்கொள்ள முன் வரனும்மணவாழ்வின் அஸ்திவாரமே. அன்பு வாழ்வில் எந்த பிரச்சனைகள் வந்தாலும் அன்பு இருந்தால் போடப்பட்ட அஸ்திவாரம் உறுதியாய் இருக்கும் இது உங்கள் மணபலம் அசைக்கமுடியாத தன் நம்பிக்கை இதை வழர்த்துக்கொள்வது தான் இருவரால் கட்டப்படும் வாழ்க்கை.ஒருவருக்கொருவர் மணம் விட்டு பேசனும் உண்மையாக நடந்து கொள்ளனும் சிலர் பணம் தான் முக்கியம் பொருள்தான் முக்கியம் என்ற தன் குடும்பத்தை கை விட்டு குடுப்பத்துக்கதான் உழைக்கின்றோம் என்ற படி உழைத்து வீடு பொருள் என நிறையகுவித்து கொண்டு மரம் பொல் வாழ்ந்து கொண்டு இருப்பதும் வாழ்கை யல்ல மணதை புரிந்து கொண்டு கடுமையான உழைப்புடன் குடுப்பத்தையும் கவனிக்கும்போதுதான் அங்கே சிறைகூட கோயிலாய் மாறுகின்றன.தனிப்பட்ட சொந்தநலன்கருதி இருப்பது போல் கணவன் மணைவியிடம் மணைவி கணரிடம் அக்கறை செலத்தும் தம்பதியினர் குறைவாக இருக்கின்றார்கள் இது கூட ஒரு மணஉலைச்சலையும் வெறுப்பையும் வரவழைக்கின்றது காரணம் இல்லாமல் ஒருவரை ஒருவர் திட்டி தீர்ப்பது இல்லை மணைவிய அடிப்பது பிரச்சனைகளை தாங்களே உருவாக்குவது பன்பு அதை தீர்க்க முடியாத போது இருவருக்குள் சண்டை ஏற்படுத்திக்கொள்வது இப்படியான வாழ்க்கைதான் பலரிடம் காணக்கூடியதாக உள்ளது. சந்தோசமான வாழ்க்கை கட்டுவது கஸ்ரம்தான் இருந்தும் திருமண பந்தங்களுக்குள் புகுந்து கொண்டால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுமணைவி கணவரிடம் அன்பையும் காதலையும் கொடுத்து அவனின் நிலை அறிந்து உரையாடி பிரச்சனைகளை சமாளித்து தியகம் செய்து வாழகற்றக்கொள்ளுங்கள்.அதே போல் கணவனும் மணைவியை துண்புறுத்தாமல் வேறுபாடு காட்டாமல் கோபத்தை கூட சமாளித்து அவளின் சரியான கடமைகளை கண்டு வியந்து பிழை இருந்தால் செல்மாய் சுட்டிக்காட்டிஇருவரும் கூர்மையான வார்த்தைகளால் குத்தி கிழிக்காமல் மெண்மையாய் பேசி இருப்பதை உண்டு மகிழ கற்றுக்கொள்ளுங்கள் இல்லறம்நல்லறமாகும்.


ராகினி




Monday, January 7, 2008

மனதில் உறுதி தேவை

மனதில் உறுதி தேவை


மனதில் உறுதி தேவை. வாழ்க்கை வாழ்வதற்கே, சாவதற்கு அல்ல ஒவ்வொரு சோதனையைையும் வெற்றியோடு தாண்டி முன்னேறிச் செல்வதற்கு முதலில் மனதில் உறுதி வேண்டும்.

நாம் செல்லும் பாதைகள் எங்கும் கல்லும், முற்களும், செடிகளும், குப்பைகளும், சேறுமாய், பள்ளங்களும் நிறைந்து இருக்கும். இந்தப் பாதையில் நாம் எப்படிப் போக முடியம் என்று மற்ற பாதையில் செல்வதால் காலமும் நேரமும் தான் நம்மை விட்டு வொகுதூரம் செல்கின்றன.

அந்தப் பாதையையும் தாண்டிச்செல்ல முடியும் என்கின்ற மன உறுதி வந்து விட்டால் தாண்டிச் செல்ல முடியும். அன்றைய காலத்தை விட இன்றைய காலம் மாறுபட்டு நிற்கின்றது. உணவு, உடை நடைகள், நோய்கள் எல்லாம் வெவ்வேறு கோணங்களாக மாறிவிட்ட போது மனதில் சஞ்சலங்களும் வடுக்களும் நிறைந்து போயின.

இதை நாம் சமளிப்பதற்கு ஒரே மருந்து நம்மை நாம் முதலில் சமாதானப் படுத்தி, தேவையற்ற விஷயங்களைத் தூக்கி எறிந்து, நல்ல விஷயங்களை மட்டும் சுவாசித்து, மனதில் நிலையான உறுதியை நமக்குள் ஏற்ற்படுத்திக் கொள்ள வேண்டும்.

முதலில் மனதில் சக்தி இல்லை என்றால் வாழ்கையைக் கொண்டு செல்வது கடினம். முக்கியமாக எந்த ஒரு விஷயத்திற்காகவும் நம்மை முழுமையாய் அர்ப்பணித்து விடக் கூடாது. அதுவே முதலில் நம்மை நோயில் வீழ்த்தி விடும். இம்மனம் என்ற மாளிகை மாயை என்ற போதைக்குள் புதைக்கப்பட்டு விட்டால் அது மாயையைத்தான் தேடிக்கொண்டே இருக்கும். மாயையிடம் இருந்து மனதைக் காப்பாற்ற உண்மைகளை அறிந்து கொள்ள முடியாவிட்டாலும் மாயையிடம் மாட்டிக்கொள்ளாதவாறு கவனமாய் இருக்க வேண்டும்.

நம் மனதை அலைமோத விட்டால் அது நம்மை நாமே அழித்துக் கொள்ள வேண்டிய நிலைதான் தரும். அதன் பின் எந்த மருந்தாலும் நம்மை குணப்படுத்திக் கொள்ள முடியாது. நமது வாழ்க்கை மரணத்தோடு முடிவடைகின்றதுதானே என்ற நினைத்துக்கொண்டு வாழ்வதை விட இந்த மரணம் வரையாவது நல்லதாக வாழ்வோம் என்று வாழ்வதே வாழ்க்கையின் சிறப்பு. இதற்கு நமது சிந்தனைகளும் மனதும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். வாழ்வதற்கு நம்மை நாம் தயார்ப்படுத்திக் கொள்ளணும். எதிர்ப்புகளையும் துன்பங்களையும் சமாளிக்க கற்றுக்கொள்ளணும்.

ஒவ்வொரு தினமும் ஏதாவது ஒரு நிலை மாறத்தான் செய்கின்றது. அந்த மாற்றங்களைக் கண்டு வெறுப்பும் சோர்வும் வரத்தான் செய்யும். அதை முறியடிக்கும் நிலைக்கு நம் மனதைத் தயார்படுத்திக் கொள்ளணும். எந்த ஒரு கொடை வள்ளலாலும் சாதிக்க முடியாத எந்த ஒரு விஷயத்தையும் இந்த மனம் என்பதால் சாதிக்க முடியும். மனது உறுதியாக இருந்தால் ஒரு சாம்ராஜ்யத்தையும் அசைக்க முடியும்.