Monday, January 7, 2008

மனதில் உறுதி தேவை

மனதில் உறுதி தேவை


மனதில் உறுதி தேவை. வாழ்க்கை வாழ்வதற்கே, சாவதற்கு அல்ல ஒவ்வொரு சோதனையைையும் வெற்றியோடு தாண்டி முன்னேறிச் செல்வதற்கு முதலில் மனதில் உறுதி வேண்டும்.

நாம் செல்லும் பாதைகள் எங்கும் கல்லும், முற்களும், செடிகளும், குப்பைகளும், சேறுமாய், பள்ளங்களும் நிறைந்து இருக்கும். இந்தப் பாதையில் நாம் எப்படிப் போக முடியம் என்று மற்ற பாதையில் செல்வதால் காலமும் நேரமும் தான் நம்மை விட்டு வொகுதூரம் செல்கின்றன.

அந்தப் பாதையையும் தாண்டிச்செல்ல முடியும் என்கின்ற மன உறுதி வந்து விட்டால் தாண்டிச் செல்ல முடியும். அன்றைய காலத்தை விட இன்றைய காலம் மாறுபட்டு நிற்கின்றது. உணவு, உடை நடைகள், நோய்கள் எல்லாம் வெவ்வேறு கோணங்களாக மாறிவிட்ட போது மனதில் சஞ்சலங்களும் வடுக்களும் நிறைந்து போயின.

இதை நாம் சமளிப்பதற்கு ஒரே மருந்து நம்மை நாம் முதலில் சமாதானப் படுத்தி, தேவையற்ற விஷயங்களைத் தூக்கி எறிந்து, நல்ல விஷயங்களை மட்டும் சுவாசித்து, மனதில் நிலையான உறுதியை நமக்குள் ஏற்ற்படுத்திக் கொள்ள வேண்டும்.

முதலில் மனதில் சக்தி இல்லை என்றால் வாழ்கையைக் கொண்டு செல்வது கடினம். முக்கியமாக எந்த ஒரு விஷயத்திற்காகவும் நம்மை முழுமையாய் அர்ப்பணித்து விடக் கூடாது. அதுவே முதலில் நம்மை நோயில் வீழ்த்தி விடும். இம்மனம் என்ற மாளிகை மாயை என்ற போதைக்குள் புதைக்கப்பட்டு விட்டால் அது மாயையைத்தான் தேடிக்கொண்டே இருக்கும். மாயையிடம் இருந்து மனதைக் காப்பாற்ற உண்மைகளை அறிந்து கொள்ள முடியாவிட்டாலும் மாயையிடம் மாட்டிக்கொள்ளாதவாறு கவனமாய் இருக்க வேண்டும்.

நம் மனதை அலைமோத விட்டால் அது நம்மை நாமே அழித்துக் கொள்ள வேண்டிய நிலைதான் தரும். அதன் பின் எந்த மருந்தாலும் நம்மை குணப்படுத்திக் கொள்ள முடியாது. நமது வாழ்க்கை மரணத்தோடு முடிவடைகின்றதுதானே என்ற நினைத்துக்கொண்டு வாழ்வதை விட இந்த மரணம் வரையாவது நல்லதாக வாழ்வோம் என்று வாழ்வதே வாழ்க்கையின் சிறப்பு. இதற்கு நமது சிந்தனைகளும் மனதும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். வாழ்வதற்கு நம்மை நாம் தயார்ப்படுத்திக் கொள்ளணும். எதிர்ப்புகளையும் துன்பங்களையும் சமாளிக்க கற்றுக்கொள்ளணும்.

ஒவ்வொரு தினமும் ஏதாவது ஒரு நிலை மாறத்தான் செய்கின்றது. அந்த மாற்றங்களைக் கண்டு வெறுப்பும் சோர்வும் வரத்தான் செய்யும். அதை முறியடிக்கும் நிலைக்கு நம் மனதைத் தயார்படுத்திக் கொள்ளணும். எந்த ஒரு கொடை வள்ளலாலும் சாதிக்க முடியாத எந்த ஒரு விஷயத்தையும் இந்த மனம் என்பதால் சாதிக்க முடியும். மனது உறுதியாக இருந்தால் ஒரு சாம்ராஜ்யத்தையும் அசைக்க முடியும்.

No comments: