Thursday, January 10, 2008

சந்தோசமான வாழ்வு அமைத்துக்கொள்ளவது எப்படி


சந்தோசமான வாழ்வு அமைத்துக்கொள்ளவது எப்படி



சந்தோசமாக நிறைந்த வாழ்க்கை அமைவதும் . அமைத்துக்கொள்வதும் கஸ் ரம் தான்.இருந்தும் நாம் நினைத்ததும் நம் மனதில் கட்டி எழுப்பிய கற்ப்பனைகளும் என் கணவர் இப்படித்தான் கிடைக்கனும்என் மணைவி இப்படித்தான் எனக்கு கிடைக்கனும் என்ற கற்ப்பனை கள் நம் வாலிப வயதில் கட்டி எழுப்பிய மாளிகைதான்.


ஆனால் நினைத்தது கிடைக்கவில்லை எதிர் மாறக கிடைத்த போது தான் அங்கேவிரிசல்கள் வளர்ந்து கொண்டேபோகின்றது உருவாகும் வீட்டுக்கு போடப்பட்ட அத்திவாரம் சரியாக அமையாததால் வாழ்க்கை என்ற வீடு இடிஇடியத்தொடங்கி விடுகின்றது.காரணம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள மறுப்பதும் ஒருவரை ஒரவர் நேசிக்க மறுப்பதும் தான் என்ற அகந்தைக்குள் வாழ்வதும்.

ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் போவதும். அலர்ச்சியம் செய்வதும் காரம் இல்லாமல் ஒருவரை திட்டிக்கொள்வதும்.கருணை அன்பு பாசம் தவிப்பும் இல்லாத போது அங்கே மனக்கோட்டைகள் யாவும் சிதைந்து போகின்றது.வாழ்க்கை என்பது சுலபமாக இருக்காது அது ஒரு சிறைச்சாலைதான் சிறைச்சாலையையும் கோயிலாக மாற்றிக்கொள்ள மனது வேண்டும்திடமாக வாழும் மனது வேண்டும் முயற்ச்சிதான் எதுக்கும் வெற்றி தருவது அன்றைய தம்பதிகள் இன்றும் சந்தோசமாக வாழ்கின்றார்களே அதுக்கு ஒரே ஒரு காரணம் அவர்களின் புரிந்துணர்வு விட்டுக்கொடுத்தல்.தன்னலம்கருதாத உண்மையான உழைப்பு இருவரும் ஒருவரை ஓருவர் பகிர்துகொள்ளும் பண்பு.

இன்றைய சமுதாயம் ஏன் இப்படி மாறியது . அதுதான் தான் என்ற அகங்காரம் கணவன் மணைவியிடம் மணைவி கணவரிடம் விட்டுக்கொடுக்கும் மண நிலை மாறி அன்பு காதல் மறக்கப்பட்டு இருவருக்குள் போட்டி போடும் நிலைதான் இன்றைய சமுதாயத்தின் சீர்கேடான வாழ்க்கையின் விரிசல் .


நமக்கு கிடைத்த நேரத்தையும் மயற்ச்சியையும் நமக்குள் நாம் அர்ப்பணித்துக்கொள்ளனும் முதல் அர்பணித்துக்கொள்ள முன் வரனும்மணவாழ்வின் அஸ்திவாரமே. அன்பு வாழ்வில் எந்த பிரச்சனைகள் வந்தாலும் அன்பு இருந்தால் போடப்பட்ட அஸ்திவாரம் உறுதியாய் இருக்கும் இது உங்கள் மணபலம் அசைக்கமுடியாத தன் நம்பிக்கை இதை வழர்த்துக்கொள்வது தான் இருவரால் கட்டப்படும் வாழ்க்கை.ஒருவருக்கொருவர் மணம் விட்டு பேசனும் உண்மையாக நடந்து கொள்ளனும் சிலர் பணம் தான் முக்கியம் பொருள்தான் முக்கியம் என்ற தன் குடும்பத்தை கை விட்டு குடுப்பத்துக்கதான் உழைக்கின்றோம் என்ற படி உழைத்து வீடு பொருள் என நிறையகுவித்து கொண்டு மரம் பொல் வாழ்ந்து கொண்டு இருப்பதும் வாழ்கை யல்ல மணதை புரிந்து கொண்டு கடுமையான உழைப்புடன் குடுப்பத்தையும் கவனிக்கும்போதுதான் அங்கே சிறைகூட கோயிலாய் மாறுகின்றன.தனிப்பட்ட சொந்தநலன்கருதி இருப்பது போல் கணவன் மணைவியிடம் மணைவி கணரிடம் அக்கறை செலத்தும் தம்பதியினர் குறைவாக இருக்கின்றார்கள் இது கூட ஒரு மணஉலைச்சலையும் வெறுப்பையும் வரவழைக்கின்றது காரணம் இல்லாமல் ஒருவரை ஒருவர் திட்டி தீர்ப்பது இல்லை மணைவிய அடிப்பது பிரச்சனைகளை தாங்களே உருவாக்குவது பன்பு அதை தீர்க்க முடியாத போது இருவருக்குள் சண்டை ஏற்படுத்திக்கொள்வது இப்படியான வாழ்க்கைதான் பலரிடம் காணக்கூடியதாக உள்ளது. சந்தோசமான வாழ்க்கை கட்டுவது கஸ்ரம்தான் இருந்தும் திருமண பந்தங்களுக்குள் புகுந்து கொண்டால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுமணைவி கணவரிடம் அன்பையும் காதலையும் கொடுத்து அவனின் நிலை அறிந்து உரையாடி பிரச்சனைகளை சமாளித்து தியகம் செய்து வாழகற்றக்கொள்ளுங்கள்.அதே போல் கணவனும் மணைவியை துண்புறுத்தாமல் வேறுபாடு காட்டாமல் கோபத்தை கூட சமாளித்து அவளின் சரியான கடமைகளை கண்டு வியந்து பிழை இருந்தால் செல்மாய் சுட்டிக்காட்டிஇருவரும் கூர்மையான வார்த்தைகளால் குத்தி கிழிக்காமல் மெண்மையாய் பேசி இருப்பதை உண்டு மகிழ கற்றுக்கொள்ளுங்கள் இல்லறம்நல்லறமாகும்.


ராகினி




No comments: